இடுகைகள்

சர்வதேச மகளிர் தினப் பாராட்டு பெருமன்றம், கந்தர்வகோட்டை கிளை

படம்
  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கந்தர்வகோட்டை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சாதனை பெண்மணிகள் நான்கு பேருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மருத்துவர் தன.குணசீலி ( மருத்துத்துறை), கந்தர்வகோட்டை பகுதியின் முதல் பெண் நாவலாசிரியர் ந. சுலோச்சனா சகாதேவன், தேர்தல் ஆணையத்தின் விருதை தமிழ்நாடு ஆளுநர் கையால் விருது பெற்ற அண்டனூர் கிராம நிர்வாக அலுவலர் சா. இளவரசி, கந்தர்வகோட்டை முழுநேர கிளை நூலகர் ஆ. வனிதா நால்வருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் திரு. மா. ரமேஷ் அவர்களும் தஞ்சாவூர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கௌரவத் தலைவர் மருத்துவர் மு. செல்லப்பன் அவர்களும் சாதனை பெண்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்கள்.  இந்நிகழ்வுக்கு கந்தர்வகோட்டை கிளைத் தலைவர் மஞ்சைதாசன் அவர்கள் தலைமை வகித்தார். கிளைச் செயலர் ஜீவாதாசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா, மாவட்டச் செயலர் பாலச்சந்திரன், நாவலாசிரியர் சோலச்சி,  தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் முத்துக்குமார், கந்தர்வகோட்டை கிளை தலை...

அன்னவாசல் கிளை - நூல் வெளியீடு

படம்
 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பாக கவிஞர் செங்கை தீபிகா அவர்களின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சிகள் என்கின்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. எழுத்தாளர் சோலச்சி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவானது புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்கள் வெளியிட டாக்டர் சுபாஷ் காந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்விற்கு கே ஆர் தர்மராஜன் கோகிலா பள்ளியின் முதல்வர் இராபர்ட் முன்னிலை வகித்தனர். கவிஞர் சாக்கிய பிரபு நிகழ்ச்சியை வரவேற்றார். எழுத்தாளர் கனிமொழி செல்லத்துரை மற்றும் எழுத்தாளர் பாண்டி செல்வம் ஆகியோர் நூல் குறித்து ஆய்வு செய்தனர். செங்காந்தள் பதிப்பகத்தின் நிறுவனர் எழுத்தாளர் பவுலி , மொழியில் ஆய்வாளர் முனைவர் ஏசுராசா, கவிஞர் பாலச்சந்திரன், பேராசிரியர் ஆறுமுகம், கவிஞர் நிரோஷா, கவிஞர் மு கீதா, போன்றோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்வின் முன்னதாக மரம் ராஜா அவ...

கலை இலக்கியப் பெருமன்றம்- கந்தர்வகோட்டை கிளை , புதிய பொறுப்பாளர்கள்

படம்
 இன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - கந்தர்வகோட்டை கிளைக் கூட்டம்  நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் பாலச்சந்திரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டார். கிளையில் நடந்த வேலைகள், எதிர்கால வேலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கவிஞர்கள்  படைப்புகள் வாசித்தார்கள்.  இந்நிகழ்வில் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  கிளைத் தலைவர் - கவிஞர் மஞ்சை தாசன் செயலர் - தோழர் உ. ஜீவாதாசன் பொருளர் - கவிஞர் ஜெயப்பிரகாஷ் அவர்கள் துணைத் தலைவர்  ஓவியர் அரங்க. கலியபெருமாள்  துணைச் செயலர் கோ. சரவணமுத்து  செயற்குழு உறுப்பினர்கள் சாமியய்யா  ராஜேஷ் சத்தியராஜ் ராசு மோகன்  கவியரசு மாவட்டச் செயலாளர் தோழர் பாலச்சந்திரன் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி, உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொண்டார்.  ஜெயப்பிரகாஷ் நன்றியுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

நூற்றாண்டு விழா - நன்றிகள்

படம்
  29.12.2024 ஞாயிறு அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டக் குழு எழுத்தாளர் சாரதா நூற்றாண்டு, ஜனமித்திரன் நூற்றாண்டு மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா ( ராஜேஸ்வரி கோதண்டம் மொழிபெயர்த்த சாரத நூல், அண்டனூர் சுராவின் புதுக்கோட்டை : பன்றி நாடு முதல் புதுகை வரை,  துவாரகா சாமிநாதனின் சப்த கன்னிகள் நாவல், அழ. கணேசனின் மூன்று கவிதை நூல்கள் ) வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு எழுத்தாளர் அண்டனூர் சுரா தலைமை வகித்தார். மேனாள் மாவட்டத் தலைவர் ஆசிரியர் மு. சிவானந்தம் வரவேற்புரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.  எழுத்தாளர் சோலச்சி அறிமுக உரையாற்றினார். இந்நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு தெலுங்கு மொழிக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் லெட்சுமி நாராயணா அவர்கள் வருகைதந்து எழுத்தாளர் சாரத குறித்து உரையாற்றியதும் அதை மாநில பொருளர் ரமணி அவர்கள் மொழிபெயர்த்ததும் சிறப்புக்குரியது. ஆந்திரா மாநிலத்தின் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் கலந்துகொண்டார். புதுக்கோட்டை சிற்றிதழ்க...