நூற்றாண்டு விழா - நன்றிகள்

 29.12.2024 ஞாயிறு அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டக் குழு எழுத்தாளர் சாரதா நூற்றாண்டு, ஜனமித்திரன் நூற்றாண்டு மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா ( ராஜேஸ்வரி கோதண்டம் மொழிபெயர்த்த சாரத நூல், அண்டனூர் சுராவின் புதுக்கோட்டை : பன்றி நாடு முதல் புதுகை வரை,  துவாரகா சாமிநாதனின் சப்த கன்னிகள் நாவல், அழ. கணேசனின் மூன்று கவிதை நூல்கள் ) வெளியீட்டு விழா நடைபெற்றது.




நிகழ்விற்கு எழுத்தாளர் அண்டனூர் சுரா தலைமை வகித்தார். மேனாள் மாவட்டத் தலைவர் ஆசிரியர் மு. சிவானந்தம் வரவேற்புரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.  எழுத்தாளர் சோலச்சி அறிமுக உரையாற்றினார்.

இந்நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு தெலுங்கு மொழிக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் லெட்சுமி நாராயணா அவர்கள் வருகைதந்து எழுத்தாளர் சாரத குறித்து உரையாற்றியதும் அதை மாநில பொருளர் ரமணி அவர்கள் மொழிபெயர்த்ததும் சிறப்புக்குரியது. ஆந்திரா மாநிலத்தின் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் கலந்துகொண்டார்.

புதுக்கோட்டை சிற்றிதழ்கள் குறித்து ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நீண்ட உரையாற்றினார்.  சந்திரா ரவீந்திரன்,  புதுகை ப்ளீம் சொசைட்டி எஸ். இளங்கோ,  தமுஎகச மாவட்டச் செயலர் ஸ்டாலின் சரவணன், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் டி.எஸ்.நடராஜன், மாநிலத் தலைவர் எஸ்.கே. கங்கா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சாரத படைப்புகள் குறித்தும் அவரது சிறுகதைகள் குறித்தும் முற்போக்கான பார்வையில் கருத்துகளை பதிவு செய்தார் மாநில பொதுச்செயலாளர் த. அறம் அவர்கள்.

நிறைவாக துவாரகா சாமிநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இந்த நிகழ்வு இந்தளவு வெற்றிபெற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் உறுப்பினர்கள் முழு ஒற்றுழைப்பு நல்கியதே காரணம். மேலும் தோழமை அமைப்புகள்  காரணமாக இருந்துள்ளார்கள். அனைவருக்கும் மாவட்டக்குழுவின் சார்பில் நன்றிகள்!






























கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், ஆலங்குடி கிளை

கலைமாமணி நவீனன் விருது பெறும் கவிமதி சோலச்சி