இடுகைகள்

கலை இலக்கியப் பெருமன்றம்- கந்தர்வகோட்டை கிளை , புதிய பொறுப்பாளர்கள்

படம்
 இன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - கந்தர்வகோட்டை கிளைக் கூட்டம்  நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் பாலச்சந்திரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டார். கிளையில் நடந்த வேலைகள், எதிர்கால வேலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கவிஞர்கள்  படைப்புகள் வாசித்தார்கள்.  இந்நிகழ்வில் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  கிளைத் தலைவர் - கவிஞர் மஞ்சை தாசன் செயலர் - தோழர் உ. ஜீவாதாசன் பொருளர் - கவிஞர் ஜெயப்பிரகாஷ் அவர்கள் துணைத் தலைவர்  ஓவியர் அரங்க. கலியபெருமாள்  துணைச் செயலர் கோ. சரவணமுத்து  செயற்குழு உறுப்பினர்கள் சாமியய்யா  ராஜேஷ் சத்தியராஜ் ராசு மோகன்  கவியரசு மாவட்டச் செயலாளர் தோழர் பாலச்சந்திரன் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி, உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொண்டார்.  ஜெயப்பிரகாஷ் நன்றியுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

நூற்றாண்டு விழா - நன்றிகள்

படம்
  29.12.2024 ஞாயிறு அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டக் குழு எழுத்தாளர் சாரதா நூற்றாண்டு, ஜனமித்திரன் நூற்றாண்டு மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா ( ராஜேஸ்வரி கோதண்டம் மொழிபெயர்த்த சாரத நூல், அண்டனூர் சுராவின் புதுக்கோட்டை : பன்றி நாடு முதல் புதுகை வரை,  துவாரகா சாமிநாதனின் சப்த கன்னிகள் நாவல், அழ. கணேசனின் மூன்று கவிதை நூல்கள் ) வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு எழுத்தாளர் அண்டனூர் சுரா தலைமை வகித்தார். மேனாள் மாவட்டத் தலைவர் ஆசிரியர் மு. சிவானந்தம் வரவேற்புரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.  எழுத்தாளர் சோலச்சி அறிமுக உரையாற்றினார். இந்நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு தெலுங்கு மொழிக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் லெட்சுமி நாராயணா அவர்கள் வருகைதந்து எழுத்தாளர் சாரத குறித்து உரையாற்றியதும் அதை மாநில பொருளர் ரமணி அவர்கள் மொழிபெயர்த்ததும் சிறப்புக்குரியது. ஆந்திரா மாநிலத்தின் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் கலந்துகொண்டார். புதுக்கோட்டை சிற்றிதழ்க...

தி இந்து தமிழ் திசை

படம்
 தி இந்து தமிழ்திசை 30.12.2024

எழுத்தாளர் சாரதா மற்றும் ஜனமித்திரன் இதழ் நூற்றாண்டு (1924-2024) தினமணி

படம்
 தினமணி செய்தி 30.12. 2024

மாவட்டக் குழு அழைபபிதழ்

படம்