தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் அறந்தாங்கி கிளை
பாரதிமுற்றம் மற்றும் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் அறந்தாங்கி கிளை இணைந்து ஆவணத்தாங்கோட்டை சுகுராஜ் பள்ளியில் கவிஞர் திரு. அஜய்குமார் கோஷ் தலைமையில் பள்ளி தாளாளர் திரு ராஜ்மோகன் முன்னிலையில் சிந்துசமவெளி நாகரிகம் கண்டறிந்து உலகத்திற்கு சொன்ன சர் ஜான்மார்ஷல் நூற்றாண்டு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது
இலக்கிய விமர்சகர் வெல்டிங் சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் துவாரகசாமிநாதன் சிறப்புரையாற்றினார் கலை இலக்கியப் பெருமன்றம் மாவட்டச் செயலாளர் பாலசந்திரன் நிறைவுரையாற்றினார்
கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் ஆவணத்தாங்கோட்டை தர்மலிங்கம், ரவிசங்கர், கல்வியாளர் விஜயேந்திரன்,சிலட்டூர் சசிக்குமார் சூர்யதாஸ், புதுகை கவிஞர் சிவக்குமார், மருத்துவர் ஆவணம் போத்தியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில்இசையாசிரியை கவிதா, சிலட்டூர் சிறுமி ஜனனிஸ்ரீஜா ஆகியோர் பாரதி பாடல்கள் பாடினார்கள்.
இந்நிகழ்வில் முன்று நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
1. மீனோடு கரையேறுகிறான்- அஜய்குமார்கோஷ் - கவிதை
2. புடித்துணி - துவாரகா சாமிநாதன் - கவிதை
3. சிவகவசம் - மூ.போ என்ற மூ. போர்த்தியப்பன் - கவிதை
கருத்துகள்
கருத்துரையிடுக