மணமேல்குடி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கிளையின் இலக்கிய கூடல்
மணமேல்குடி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கிளையின் இலக்கிய கூடல் 3.11.24 மாலை கிளைத்தலைவர் சாமியப்பா தலைமையில் நடைபெற்றது.
சார் ஜான் மார்சல் கண்டறிந்து வெளிப்படுத்திய சிந்துவெளி நாகரிகம் நூற்றாண்டு குறித்தும், வருகிற டிசம்பர் 29 அன்று நமது மாவட்டத்தில் பிறந்து தெலுங்கு மொழியில் இலக்கியவாதியாக திகழ்ந்த எழுத்தாளர் நடராஜ் சுப்பிரமணியன் என்கின்ற சாரதா அவர்களின் நூற்றாண்டு விழாக் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர், மாநில கமிட்டி முடிவுகள் குறித்து மதிப்புறு தலைவர் அஜய்குமார் கோஷ் அவர்களும் விரிவாக உரையாற்றிட நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அறந்தாங்கி கிளை செயலாளர் சிவா அவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக